மயிலாடுதுறை ரயில் நிலைய பேட்டரி கார் சீர்காழிக்குப் பயணம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு ஓஎன்ஜிசியால் வழங்கப்பட்ட ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் உபயோகப்படுத்தாததால் சீர்காழிக்கு பயணம் ஆகிறது.

Update: 2024-05-21 12:33 GMT

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு ஓஎன்ஜிசியால் வழங்கப்பட்ட ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் உபயோகப்படுத்தாததால் சீர்காழிக்கு பயணம் ஆகிறது.


மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வரும் நடக்க சிரமப்படும் பயணிகள், வயதானவர் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை ஒன்று முதல் ஐந்தாவது பிளாட்பாரம்வரை கொண்டு போய் விடுவதற்கும் அங்கிருந்து ஏற்றி வறுவதற்கும் வசதியாக ஏற்கனவே ஒரு பேட்டரி கார் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இயங்கி வருகிறது .மேலும் அதன் சேவையை விரிவு படுத்துவதற்காக மூன்று சங்கங்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.8லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி காரை மார்ச் 14ஆம் தேதி அன்று வழங்கியது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மேலாளர் மாறன் அதை வழங்கினார். அதிலிருந்து இன்று வரை அந்த பேட்டரி கார் இயக்கப்படாமல் அப்படியே இருப்பதால் இது குறித்து விமர்சனங்கள் எழுந்நவணாணம் இருந்தது. இதனை சரியாக இயக்குவதற்கு யாரும் முன் வராததால் பேட்டரி கார் வசதி இல்லாத சீர்காழி அல்லது பாபநாசம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வழங்குவதற்கு ஓ என் ஜி சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது, விரைவில் சீர்காழி அல்லது பாபநாசம் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது என மேலாளர் ஓ என் ஜி சி மேலாளர் மாறன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News