விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோளை நேரில் காண செல்லும் மாணவர்கள்

செயற்கைக்கோளை நேரில் காண செல்வதால் மாணவ, மாணவிகள் உற்சாகம்.

Update: 2024-02-16 16:14 GMT

இஸ்ரோ செல்லும் பள்ளி மாணவர்கள்

நாளை மாலை இஸ்ரோ விண்வெளி நிலையத்திலிருந்து இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோள் விண்ணில் அனுப்பப்பட உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் காண்பதற்கவும், அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கும் செல்கின்றனர்.

இதற்கான ஏற்பாட்டை செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்து ஐந்து பேருந்துகளில் மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் பள்ளியில் இருந்து வழி அனுப்பி வைக்கப்பட்டனர். கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குடியரசு மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் வழி அனுப்பி வைத்தனர்.

பேருந்துகளில் ஏறிய மாணவ மாணவிகள் உற்சாகம் பொங்க கையசைத்து சென்றனர். தங்களுக்கு பள்ளி பருவத்தில் இஸ்ரோ பற்றி தெரிந்து கொள்வதற்கும் செயற்கைக்கோள் பற்றி அறிந்து கொள்வதற்கும் தங்கள் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு சிறப்பான ஏற்பாடு செய்துள்ளதாகவும், முதல் மதிப்பெண் பெரும் மாணவர்கள் இலவசமாக அழைத்து செல்லப்படுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News