மயிலாடுதுறை : வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

மயிலாடுதுறை நகர் மணிக்கூண்டு கட்டிடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் செய்யப்பட்டார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-06-28 06:06 GMT

சோதனையில் ஈடுபட்ட போலீசார் (பைல் படம்)

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காவல்துறையின் 100ஐ தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டபோலீசார் மணிக்கூண்டில் திருவாரூர் மோப்பநாய்உதவியுடன் சோதனைசெய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மிரட்டல் என்பது தெரியவந்தது, இதுகுறித்து இந்தியதண்டனைச்சட்டம் 182, 285, 299, 291, 507, 506(2) என 6சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து தேடிவந்தனர்.

மிரட்டல் கால் வந்த செல்போண் எண் குறித்து தனிப்டைபோலீசார் விசாரித்தபோது சீர்காழி செம்பதனிருப்பு ராமர்கோயில்தெருவை சேர்ந்த சிவசங்கரன் மகன் சரவணன்(37) என்பது தெரியவந்தது, அவரை கைதுசெய்து விசாரித்ததில் முன்னுக்குப்பின்முரணாக பதில் தெரிவித்தார், உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளதாகவும் அடிக்கடி தான் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்துவருவது தெரியவந்தது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் இதுபோல் செய்ததாக தெரிவித்துள்ளார், மயிலாடுதுறை போலீசார் சரவணனைக் கைதுசெய்தனர், அவரது உடல்நிலையைக் கருதி காவல்துறையினரே அவனை பிணையில் விடுவித்தனர்.

Tags:    

Similar News