மயிலம் ஒன்றிய விசிக செயற்குழு கூட்டம்

Update: 2023-11-23 07:05 GMT
மயிலம் ஒன்றிய விசிக செயற்குழு கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் மைய மாவட்டம் ஒருங்கிணைந்த மயிலம் ஒன்றிய செயற்குழு கூட்டம் மயிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் திலீபன் முன்னிலை வகித்தார், நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் தலைமை தாங்கினார், இதில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் மேலிட பொறுப்பாளர் நந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் செயற்குழு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை வரவேற்பு அளிப்பது மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வுகள் மற்றும் திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு ஆகியவற்றை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, இதில் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேந்தன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அகூர்வேந்தன் மற்றும் விசிகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News