முத்தையாபுரம் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை - மேயர் உறுதி

தூத்துக்குடி முத்தையாபுரம் பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி மாணவிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.

Update: 2024-04-05 06:29 GMT
மேயர் பெரிய சாமி உறுதி

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்து வருகிறார். முத்தையாபுரம் பல்க் ஸ்டாப் பகுதியில் உள்ள கடை வீதிகளில் நடந்து சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். தற்போது பல்க் பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் முத்தையாபுரம் பல்க் பேருந்து நிறுத்தத்தில் எந்த பஸ்ஸும் நிற்பதில்லை. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று மாணவிகள் மேயரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக மேயர் தூத்துக்குடி போக்குவரத்து மேலாளரை தொடர்பு கொண்டு அனைத்து பஸ்களும் முத்தையாபுரம் பஸ் ஸ்டாப் நின்று செல்ல வேண்டும் என்று கூறினார் அதனையடுத்து, ஸ்பிக் தொழிற்சாலை வாயில் முன்பு தொழிலாளர்களிடமும் மேயர் ஜெகன் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துவேல் சுயம்பு திமுக நிர்வாகிகள் ரவீந்திரன் முத்து துறை ஜார்ஜ் முத்து பெரியசாமி இசக்கி முத்து வேல் பாண்டி மாரியப்பன் நடராஜன் கண்ணன் ஆவுடையப்பன் பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News