மாநகராட்சி பணிகள்: மேயர் ஜெகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை, வடிகால் பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
Update: 2024-03-03 11:57 GMT
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை, வடிகால் மற்றும் அனைத்து விதமான பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் பணிகளை எவ்வாறு துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் கலந்தாய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.