பருத்தியில் மாவு பூச்சி!

பருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-04-27 01:20 GMT

பருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பருத்தியில் மாவு பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் பாபநாசம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 350 எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலினால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது மாவு பூச்சி தாக்குதலில் இருந்து ஆரம்ப நிலையிலிருந்து பருத்தி பயிரை காப்பது எப்படி என்பது குறித்து பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:வறண்ட வானிலை நிலவும் கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் பருத்தியை பல்வேறு மாவு பூச்சிகள் தாக்கி சேதத்தை உண்டாக்கும். அவற்றுள் இளம் மஞ்சள் நிறத்தில் .காணப்படும் பப்பாளி மாவு பூச்சி, வெள்ளை நிறத்தில் காணப்படும் பருத்தி மாவு பூச்சி, இளஞ்சிவப்பு மாவு பூச்சி மற்றும் வால் மாவு பூச்சி ஆகியவை முக்கியமானவையாகும். வறண்ட வானிலை அதிகமான வளிமண்டல வெப்பநிலை ஆகியவை மாவு பூச்சி தாக்குதலுக்கு காரணிகள் ஆகும் பஞ்சு போன்ற படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இலைகள் மற்றும் தண்டுகளில் பரவி காணப்படும். இலை மற்றும் தண்டுகளில் இருந்து சாரை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மடங்கி மஞ்சள் நிறமாக பின்னர் உதிர்ந்து விடும் தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சி குன்றி குட்டையாக காணப்படும்.

மாவு பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற திரவத்தை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல் ஊர்ந்து செல்வதை காணலாம். மேலும் இலையின் மேற்பரப்பில் கேப்னோடியம், எனும் பூஞ்சை படர்வதால் ஒளி சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைகிறது தாவர வகை மருந்துகளான வேப்பண்ணை 2 சதம் அதாவது 1 லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப்பு 1 லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். மாவு பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையை கடந்ததால் ஒரு ஏக்கருக்கு டை மீத்தோயெட் 30 ஈசி 40 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். மாவு பூச்சிகளின் தாக்குதலை ஆரம்ப நிலையிலே கட்டுப்படுத்த தாவரம் மருந்துகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News