தென்னந்தோப்பில் நீர் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கை
பழனியில் தென்னை சாகுபடியில் முறையான நீர் நிர்வாகத்தை கடைப்பிடிக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Update: 2024-03-12 13:00 GMT
பழநி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானதாக உள்ளது. கோடை காலங்களில் முறையான நீர் நிர்வாகத்தை கடைபிடிக்காவிட்டால் தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர் பாய்ச்சா விட்டால் மரங்கள் கருகும் சூழ்நிலையும் ஏற்படும்.எனவே, கோடை காலம் துவங்கும் முன்பே தென்னந்தோப்புகளில் நீர் நிர்வாகத்திற்காக விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.தென்னை மரங்களை சுற்றிலும் உள்ள வட்டப்பாத்தியில், ஓலைகளைக் கொண்டு நிரப்பி விடுகின்றனர். போர்வெல்களில் கிடைக்கும் குறைந்தளவு தண்ணீரை பண்ணை குட்டைகள் உருவாக்கி நிரப்பி வைத்து வருகின்றனர்.