100 பெண் காவலர்களுக்கு மருத்துவ ஆலோசனை
மயிலாடுதுறை மாவட்ட பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகளுக்கு மருத்துவ ஆலோசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டில் அரசு மருத்துவர்கள் வழங்கினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 05:18 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு செம்பனார்கோவில் காவல் சரகம் மேலையூர் அழகு ஜோதி அகாடமியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மீனா ஏற்பாட்டில் 100 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் டாக்டர் காசிவிஸ்வநாதன், மயிலாடுதுறை, அரசு மருத்து இணை இயக்குனர் மருத்துவர் பானுமதி, சீர்காழி, அரசு மருத்துவர். குணசீலி, மயிலாடுதுறை அரசு குழந்தைநல மருத்துவர் சிவசங்கரி மயிலாடுதுறை மற்றும் செழியன் உடற்பயிற்சி அலுவலர், சாய் ஸ்போர்ட்ஸ், மயிலாடுதுறை ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் உடலில் தோல்நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகளை பற்றியும், பெண்களுக்கு உடலில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் குறித்தும் அதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்றும், பணியின் போதும் மற்றும் குடும்ப சூழ்நிலைக்காரணமாக ஏற்படும் மனஉளைச்சலை குறைப்பதற்கான வழிமுறைகளையும், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், உணவு பழக்கவழக்கங்கள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியன பற்றி ஆலோசனை வழங்கினர்.