கல்குவாரியில் மருத்துவக் கழிவுகள் - நோய்தொற்று ஏற்படும் அவலம்
கைவிடப்பட்ட கல்குவாரியில் மருத்துவக் கழிவுகளால் நோய்தொற்று - நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிா்வாகம் என பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
By : King 24x7 Website
Update: 2023-12-19 10:20 GMT
கைவிடப்பட்ட கல்குவாரியில் மருத்துவக் கழிவு கொட்டுவதால், நோய் தொற்று பீதி. பொதுமக்கள் கவலை. கரூர் மாவட்டம், தென்னிலை, க. பரமத்தி,நொய்யல், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல்குவாரிகள் அரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடிக்காமல், சட்ட விரோதமாக செயல்படுவதாக, ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், குவாரிகளில் கற்களை வெட்டி முடித்த பிறகு, கைவிடப்பட்ட கல்குவாரிகளை, முறையாக மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இது போன்ற குவாரிகளை இனம் கண்டு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவமனைகளில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள் அண்மையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நோய் தொற்று பீதியில் உள்ளனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கல்குவாரிகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் நோய் தொற்று பீதிக்கு ஆளாவதற்கு முன்பாக,அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.