மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா கோலாகலம்
மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா கோலாகலம் ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது . விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் வந்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் .
உலகப் பிரசித்திபெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாகளில் ஒன்றான தெப்பத்திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை இரு வேளைகளிலும் சுவாமியும் , அம்மனும் ,
அன்ன வாகனம் , காமதேனு வாகனம் , சிம்ம வாகனம் , உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் . இந்நிலையில் தெப்பதிருவிழாவையொட்டி கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும் ,
சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் , அம்மனுக்கும் எழுந்தருளிட பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் சுவாமியும் ,
அம்மனும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர் . இதன் தொடர்ச்சியாக இன்று மாலையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் , அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்வும் , தொடர்ந்து முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளும் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகிறது .
விழாவில் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர் . தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர் .