வாக்கு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் விளக்கும் கூட்டம்
பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் விளக்கும் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் நடைபெற்றது. ... வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே - 29ம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, பாராளுமன்றப் பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுற்று வாக்கு எண்ணும் பணிகள் வரும் ஜூன் - 4ம் தேதி அன்று ஆதவ் பப்ளிக்பள்ளியில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள அனைத்து துறை அலுவலர்களும் காலை 5 மணிக்கு வருகை தர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அளவில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் டேங்குகள் அமைத்து அவை முறையாக பராமரிக்கப்படுவதை நகராட்சி ஆணையர் மற்றும் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உறுதி செய்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அனைவரும் உரிய அடையாள அட்டை அணிந்து வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை மின்சார வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
ஜெனரேட்டர் வசதிகள், அவற்றிக்கான எரிபொருள் உள்ளிட்டவைகளின் இருப்பு குறித்து பொதுப்பணித்துறை மின்சாரப் பிரிவினர் கண்காணித்து உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் ஒவ்வொரு நபரையும் காவல் துறையினர் முறையாக பரிசோதித்து அனுப்பி வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களுகம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், சார் ஆட்சியர் கோகுல் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வைத்தியநாதன், விஜயா , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.