விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்த்து.

Update: 2024-05-23 06:11 GMT

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடந்த்து.


விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழரசி வரவேற்றார். மாநில தலைவர் தீபக், டிசம்பர் 3 இயக்க நிறுவனர் அறவாழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில், அரசு உத்தரவிட்டதன்படி சாலையோரம் பெட்டிக்கடை, ஆவின் பாலகம் வைத்தல், வீட்டு மனைப்பட்டா, இலவச வீடு பெறுதல், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுத்தருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுபத்ரா நன்றி கூறினார்.

Tags:    

Similar News