கோலாகலமாக நடந்த மேலச்சேரி ஓசூரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு அடுத்த மேலச்சேரியில் மிகவும் பழமையான ஸ்ரீ ஓசூரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-11-29 09:02 GMT

கோலாகலமாக நடந்த மேலச்சேரி ஓசூரம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேத்துப்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஓசூரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஓசூரம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நேற்று யாகசாலை அமைக்கப்பட்டு மங்கள இசை, திருவிளக்கு பூஜை, தீர்த்த பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், சிவபூஜை, வாங்கு சாந்தி, பிரவேசபலி என முதல் கால பூஜையும், நேற்று காலை திருவிளக்கு பூஜை, தம்பதி பூஜையுடன், யாக சாலையில் கலச புறப்பாடு மேளதாளத்துடன் கோவிலை வளர்ந்து கோபுரத்தில் சிவாச்சாரியார்கள் கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து ஓசூரம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுமாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News