மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில் மயானக் கொள்ளை விழா

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில் மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

Update: 2024-03-05 10:44 GMT

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியம்மன் 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் 2-ம் நாள் சிகர நிகழ்ச்சியான மயா னக் கொள்ளை விழா 9-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. ஆணவம் கொண்டு இருந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் எடுத்து விடுகிறார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு பல இடங்களில் அலைந்து திரிகிறார். கடைசியாக மகாவிஷ்ணு மேல்மலையனூருக்கு சென்றால் சாப விமோசனம் கிடைக்கும் என ஆலோசனை கூறுகிறார். அதன்படி சிவபெருமான் மேல்மலையனூ ருக்கு வருகிறார். அவர் இங்கு வந்து தங்கிய இரவே மகா சிவராத் திரி என்று தல புராணம் கூறுகிறது. மறுநாள் சிவபெருமான் தங்கி இருந்த மயானத்துக்கு சென்ற ஆதிபராசக்தி தான் ஏற்கனவே செய்து வைத்திருந்த நவதானிய சுண்டல் மற்றும் கொழுக்கட்டை இரண்டையும் சேர்த்து மூன்று உருண்டைகளாக வாரி இறைக்கி றார்.அதை சிவபெருமான் கையில் இருந்த பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து கீழே இறங்கி சாப்பிட தொடங்கியது. அப்போது ஆதிபராசக்தி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை மிதிக்கிறார். இதனால் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங் குகிறது. இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் வகையில் மயானக் கொள்ளை விழா நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News