மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை
சூளகிரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய நபா் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 29 வயது பெண். இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா். இவரது பெற்றோா் கூலி வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தனா். அப்போது அவா் 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக அவரது பெற்றோா் ஒசூா் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் ஆய்வாளா் சந்திரகலா வழக்குப் பதிவு செய்து, மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியவா் யார் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.