மேட்டூர் : தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு.
மேட்டூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 12 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
மேட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடைபெற்றது. இதில் கொளத்தூர் ,மேட்டூர் ,மேச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 28 தனியார் பள்ளியில் உள்ள 210 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணி, மண்டல போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா குமாரி வாகனங்களை ஆய்வு செய்தார்.
இன்று முதல் கட்டமாக 159 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த முதலுதவி சிகிச்சை பெட்டி, தீயணைப்பு கருவிகள், அவசர கால கதவுகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்பபட்டது. விதிமுறைகளை பின்பற்றாத 12 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்பட்டால் மாணவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.