எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-01-26 09:45 GMT
பெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூரில் இந்திய திருநாட்டின் 75 வது ஆண்டு குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில். வெண்புறாக்களையும், தேசியக்கொடியின் நிறங்களிலான வண்ண பலூன்களையும் வானில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் அரசு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது இவ்விழாவில் 123 பயனாளிகளுக்கு ரூ.42.56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கத்தையும் சான்றிதழ்களையும் வழங்கி அவர் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.