அட்மா திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பயறு நுண்ணூட்டம் 

அட்மா திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பயறு நுண்ணூட்டம்  வழங்கபட்டது.

Update: 2024-05-24 16:05 GMT
நுண்ணூட்டம் விநியோகம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி  விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,  வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு  திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை வட்டாரத்தில், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் வழங்கப்பட்டு வருகிறது. 

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ பயறு நுண்ணூட்டத்தினை  200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூப்பூக்கும் தருணங்களில்  தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிராமல் காய்கள் அதிக அளவில் பிடிக்கும். வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 விழுக்காடு மானியத்தில் பயறு நுண்ணூட்டம்   விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று கொள்ளலாம்" எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News