கடையின் முன் மோடி, அமித்ஷா படம் வைத்த பால் கடை உரிமையாளர் கைது
குமாரபாளையத்தில் கடையின் முன் மோடி, அமித்ஷா படம் வைத்ததற்காக கடை உரிமையாளரை தேர்தல் விதிகளை மீறியதாக பறக்கும் படையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-13 07:41 GMT
கடையின் முன் மோடி, அமித்ஷா படம் வைத்ததற்காக கடை உரிமையாளரை கைது செய்த பறக்கும் படையினர்
லோக்சபா தேர்தல் வருவதையொட்டி அனைத்து பகுதியிலும் தேர்தல் நடைமுறைகள் அதிகாரிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் உள்ள ஒரு பால் கடையின் முன்பு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரது படங்கள் விளம்பர பலகையில் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் விதிமுறை மீறியதாக பறக்கும்படையில் இருந்த உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம், 42, பால் கடை உரிமையாளர் சேகர் மீது, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி, போலீசார் வழக்குபதிவு செய்து சேகரை கைது செய்தனர்.