மனதை கொள்ளை கொள்ளும் கொல்லிமலை!
கொல்லிமலையின் சிறப்புகளும் வரலாறும்!
Update: 2024-07-06 07:07 GMT
இயற்கை வளம் மிக்க கொல்லிமலை இந்தியாவின் தெற்கு பகுதியில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய மலைத்தொடர் ஆகும். கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது. அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது. கொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 48 கி.மீ தொலைவிலுள்ளது. மலையின் உயரம் 1190 மீட்டர்கலகும். இம்மலை 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இம்மலையைச் சித்தர்கள் வாழும் 'சதுரகிரி' எனச் சித்தர் இலக்கியங்கள் கூறுகின்றன. இம்மலை மீது அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது. இதையொட்டி அறப்பளீஸ்வரர் சதகம் பாடப்பட்டுள்ளது. இங்குள்ள ஆகாசகங்கை அருவி 200 அடிக்கு மேலிருந்து விழுகிறது.(இங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். தேனுக்கும், பலாவுக்கும் கொல்லிமலை புகழ் பெற்றது. இந்த மலைப் பகுதியில் மருத்துவ குணம் மிக்க பல அபூர்வமான மூலிகை செடிகள் நிறைந்துள்ளது. இங்கு அறப்பளீஸ்வரர் கோவில், மூலிகை தோட்டம், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, வாசலூர்பட்டி படகு இல்லம், மாசி பெரிய சுவாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோவில், சிக்குப்பாறை வியூ பாயிண்ட், தொலைநோக்கி இல்லம், நம்ம அருவி, சந்தன அருவி சிற்றருவி என்று பல இடங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு சிறுதானிய வகைகளான தினை, வரகு, சோளம் அதிகமாக பயிரிடப்படுகிறது. இங்கு தனித்துவமான மிளகு வகைகள், அன்னாசி, பலாப்பழம் அதிகமாக விளைகிறது. இங்கு மூட்டு வலி, சளி ஆகியவற்றை குணப்படுத்தும் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு அரிய வகையாக கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி18 அன்று வாழ்வில் ஓரி திருவிழா இங்குள்ள மக்களால் கொண்டாடப்படுகிறது. இது அரசு விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலையை கொண்டுள்ளது இந்த கொல்லிமலை தொடர். கொல்லிமலையில் பல சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற சித்தர்களான போகர், அகஸ்தியர் குகைகள் ஆகாய கங்கை அறிவிக்க செல்லும் வழியில் இருக்கிறது. மேலும் கொல்லிமலையை சுற்றிலும் பல சித்தர்கள் தவம் இருந்த குகைகள் உள்ளதாக இங்குள்ள பொது மக்களால் கூறப்படுகிறது. மேலும் கொல்லிமலையில் மாந்திரீகம், வசியம் போன்ற செயல்பாடுகள் அதிகமாக காணப்படுகிறது. இயற்கை எழில் மிகுந்த கொல்லிமலைக்கு சென்று வந்தால் நம் மனதுக்கு புத்துணர்ச்சியும், நேர்மையான எண்ணங்களும் கிடைக்கிறது. கொல்லிமலை, கடல் மட்டத்திற்கு மேல் 4,500 அடிகள் உயரம் உடையது. 87 சதுர மைல் பரப்புடையது. சுமார் 260 கிராமங்களைக் கொண்டது. இக்கிராமங்கள் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மலைப் பகுதியில் வனவிலங்குகளான கரடிகளும், புலிகளும் வாழும் புதர்கள் உள்ளன. இங்குள்ள பள்ளத்தாக்குகள் விவசாயத்திற்குப் பயன்படத்தக்கவகையில் உள்ளன. இக்கொல்லிமலை தென்வடலாக 28 கி.மீ. நீளமும் கீழ் மேலாக 19 கி.மீ. அகலமும் உள்ளது. இம்மலையிலுள்ள சக்கரவர்த்தி,கூத்தாடி. சோப்பையன்,சோத்தவடமன், கௌரசை, சிறுப்பை, வாரப்பன் ஆகியவைகளும் இவர்களின் தலைவர்களுக்குப் பட்டக்காரர் என்றும், அடுத்தவருக்குக் கரைக்காரர் என்றும் பெயர். இம்மலையில் 'கொல்லிப்பாவை' வாழ்வதாகப் புறநானூறு, குறுந்தொகை, சிந்தாமணி, நற்றிணை, சிலப்பதிகாரம் முதலிய நூற்களில் குறிப்பு உண்டு. மலைக்காடுகளில் நிலவிய கடுமையான சூழலில் காரணமாக இம்மலை பிரதேசத்துக்கு கொல்லிமலை என பெயர் வந்தது. வரலாற்று சிறப்புமிக்க அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 720 படிக்கட்டுகள் உள்ளது. காடுகளும் சோலைகளும் நிறைந்த அப்பகுதி இயற்கையான கண்கொள்ளா கட்சியாகும். இம்மலை மீது அரப்பளீஸ்வரர் கோயில் உள்ளது. இதையொட்டி "அறப்பளீஸ்வரர் சதகம்" பாடப்பட்டுள்ளது இங்குள்ள ஆகாச கங்கை அருவி 200 அடிக்கு மேலிருந்து விழுகிறது. இங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். தேனுக்கும், பலாவுக்கும் கொல்லிமலை புகழ்பெற்றது. மலைப்பகுதியில் வனவிலங்குகளான கரடிகளும், புலிகளும் வாழும் புதர்கள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் பல்வேறு நோய்கள் தீருவதுடன் உடல் ஆரோக்கியம் அடைகிறது. இங்குள்ள பள்ளத்தாக்குகள் விவசாயத்திற்கு பயன்படத்தக்க வகையில் உள்ளது. கொல்லிமலை ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. கொடிய நோய்களை கொல்லும் அற்புத மூலிகைகளையும் கொண்டு விளங்குகிறது கொல்லிமலை. அவ்வையார் முதல் 18 சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. கொல்லிமலையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான படகு இல்லம், வாசலூர்பட்டி நகர மையத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு செயற்கை ஏரியில் அமைந்துள்ளது. மலைகளின் பசுமையால் சூழப்பட்ட அமைதியான ஏரி, இந்த இடத்தில் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று. சித்தர் குகைகள் மருத்துவ தாவரங்களால் சூழப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது, இது கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு, ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேர் குகைக்குள் நுழைவதற்கு ஏற்றது. சித்தர் குகைகள், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. பாரம்பரிய மருத்துவம் மற்றும் இயற்கை வைத்தியம் செய்யும் முனிவர்களின் புகலிடமாக இருந்தது. தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் லிமிடெட் (TAMPCOL) மூலம் தமிழ்நாடு, நாமக்கல்லில் டாம்கோல் மருத்துவப் பண்ணை நிறுவப்பட்டது. புகழ்பெற்ற கொல்லிமலையில் அமைந்துள்ள அழகிய பண்ணை, மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரங்களின் இல்லம். மருத்துவ தாவரங்கள், ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பிற யுனானி அல்லது சித்தா நடைமுறைகளை உருவாக்குவதன் அவசியத்தை அப்போதைய தமிழக அரசு 1983 இல் அங்கீகரித்தது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற விருந்தினர்கள் இந்த பண்ணையை அணுகலாம். பார்வையாளர்கள் குறிப்பிட்ட TAMPCOL ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் பொருட்களை ஆன்-சைட் ஸ்டோரில் இருந்து வாங்கலாம்.