பள்ளத்தில் கவிழுந்த மினி பேருந்து: 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலைக்கு பெயிண்ட் அடிக்க நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது மோதி, பள்ளத்தில் கவிழுந்த மினி பேருந்து: 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

Update: 2024-02-19 09:29 GMT
ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலைக்கு பெயிண்ட் அடிக்க நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது மோதி, பள்ளத்தில் கவிழுந்த மினி பேருந்து: 15 பேர் காயங்களுடன் அரசு மருத்துவக்கல்லுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒசூர் அடுத்த சின்னார் நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஓரமாக உள்ள தடுப்புகளுக்கு வெள்ளைநிற பெயிண்ட் அடிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சாலையிலேயே பெயிண்ட் பாரம் ஏற்றி டாடா ஏஸ் நிறுத்தி வைத்து முன்னெச்சரிக்கையாக 50 மீட்டர் தூரத்திற்கு சிவப்புற நிற எச்சரிக்கை கூம்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. 12 பயணிகளுடன் கிருஷ்ணகிரி நோக்கி வந்த மினி பேருந்து சாலையில் இருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பள்ளத்தில் செங்குத்தாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மினி பேருந்தில் இருந்த 12 பேர், நெடுஞ்சாலைத்துறை தொழிலாளர்கள் 3 பேர் என 15பேர் காயங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கிருஷ்ணகிரி அரசு மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சூளகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. நெடுஞ்சாலைத்துறை தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News