மினி மாரத்தான் போட்டி: 4 வயது பிரிகேஜி மாணவி சாதனை!

ஓட்டப்பிடாரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். 

Update: 2024-02-05 11:30 GMT


ஓட்டப்பிடாரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.


துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் 36ம் ஆண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினிமாரத்தான் போட்டி நேற்று நடந்தது.  மாணவர்களுக்கான 10 கி.மீ துார போட்டியை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் துவக்கி வைத்தார். இதில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மனோஜ்குமார், கருத்தப்பாண்டி, மாரிச்செல்வம் ஆகியோர் முதல் 3 இடங்களை தட்டிச் சென்றனர். 

மாணவிகளுக்கான 5 கி.மீ துார போட்டியை ஓட்டப்பிடாரம் பஞ்., தலைவர் இளையராஜா துவக்கி வைத்தார். இதில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கனகலட்சுமி முதல் பரிசையும், மகாலட்சுமி 3வது பரிசையும், கயத்தார் ஆர்.சி பாத்திமா மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா 2வது பரிசையும் தட்டிச் சென்றனர்.

  2 கி.மீ துாரப் போட்டியில், சிறுவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அஜய் முதல் பரிசையும், கமலேஸ்வரன் 3வது பரிசையும், ஓட்டப்பிடாரம் டி.எம்.பி மெக்கவாய் பள்ளி மாணவர் முத்துக்குமார் 2வது பரிசையும் தட்டிச் சென்றனர்.  சிறுமிகள் பிரிவில், ஓட்டப்பிடாரம் சந்திரா மெட்ரிக் பள்ளி மாணவி அனிஷா முதலிடத்தையும், புதியம்புத்துார் பிரசன்னா மெட்ரிக் பள்ளி மாணவி சுவேதா 2வது பரிசையும், முப்புலிபட்டி பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி மாணவி பிரதிக்ஷாவும் தட்டிச் சென்றனர். இதில், துாத்துக்குடி செயிண்ட் அன்னஸ் பள்ளியின் 4 வயது பிரிகேஜி மாணவி சாருஜனா போட்டி துாரத்தை ஓடி முடித்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்று சிறப்பு பரிசு பெற்றார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, வ.உ.சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பெரியமோகன், துணை தலைவர் யோகராஜ், ஆலோசகர் தமிழாசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு தலைவர் சண்முகராஜ் வரவேற்றார். 

வெற்றி பெற்றவர்களுக்கு, கே.பி.கே காண்ட்ராக்டர்ஸ், அ.தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சீனிராஜன், முப்புலிவெட்டி பால் கூட்டுறவு சங்க தலைவர் முத்துவேல், ஓட்டப்பிடாரம் வ.உ.சி இளைஞர் பேரவை தலைவர் சண்முகவேல், ஓட்டப்பிடாரம் மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் முருகன், தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் பழனிச்சாமி, ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கள்ளாண்ட பெருமாள், 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அரிச்சந்திரன், துாத்துக்குடி வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் பரமசிவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

  ஓட்டப்பிடாரம் முன்னாள் பஞ்., தலைவர் ஆதிலிங்கம், உடற்பயிற்சி ஆசிரியர்கள் கேபா ரோசாரியா, செந்தில்குமார், மெர்லின்ஜெனி, சேகர், கிருஷ்ணன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். வ.உ.சி விளையாட்டுக் கழக இணை செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News