செஞ்சியில் அமைச்சர் சிறப்பு தொழுகை
செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 13:57 GMT
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
.பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று செஞ்சியில் இஸ்லாமியர்கள் பீரங்கிமேடு பெரிய பள்ளிவாசலில் இருந்து ஜமாத் தலைவர் சையத் மஜீத்பாபு தலைமையில் ஊர்வலமாக செஞ்சி கோட்டை சாதுல்லா கான் மசூதிக்கு வந்தனர்.
அங்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்து கொண்டனர்.