வேலூரில் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன்.

Update: 2024-02-17 11:29 GMT

அமைச்சர் துரைமுருகன்

புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன். வேலூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக்கண்காட்சியினை மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி இன்று துவங்கி வரும் 27 ஆம் தேதி வரையில் 10 நாட்கள் நடக்கிறது. இதில் 88 அரங்குகளில், மருத்துவம் ,அறிவியல், கணிதம், ஜோதிடம், ஆன்மிகம்,வரலாறு ,தோட்டபராமரிப்பு வேளாண்மை, மூலிகைகளின் பயன்கள், முக்கிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, காவியங்கள், சிறுநாவல்கள், மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள் என இதில் மொத்தம் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சியை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர் . பின்னர் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில் , இலக்கை நோக்கி பயணிக்க கல்வி ஒன்றே உதவும். மற்றவைகள் எல்லாம் சில மணிநேர சந்தோஷம் தான். கல்வி தான் உங்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை தரும். ஆகவே மாணவர்கள் அறிவை வளர்த்துகொள்ள வேண்டும் . எனவே அதிக அளவில் புத்தகங்களை படிக்க வேண்டுமென பேசினார். இவ்விழாவில் திரளான பள்ளி மாணவ,மாணவிகள் பொதுமக்களும் பங்கேற்றன.
Tags:    

Similar News