திமுகவினருக்கு ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர்
திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.
தருமபுரி சட்டமன்ற தொகுதி திமுக பாராளுமன்ற வேட்பாளர் ஆ.மணி அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் P. பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் கலந்துகொண்ட இக்கூடத்தில் தருமபுரி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஆ.மணியை அறிமுகம் செய்து வைத்த அமைச்ச,ர் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி திமுக வேட்பாளர் வெற்றியடைய அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு வெற்றி கனியை தமிழக முதல்வரிடம் வழங்க அனைத்து தொண்டர்கள் பாடுபட வேண்டுமென அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் நகர திமுக செயலாளர் நாட்டான் மாது மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.பி பெரியண்ணன் சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர் நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் பெண்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.