சத்திய ஞான சபையில் உணவு வழங்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
கடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் அமைச்சர் ஆய்வு செய்து உனவு பரிமாறினார்.;
Update: 2024-01-26 09:19 GMT
உணவு பரிமாறிய அமைச்சர்
கடலூர் மாவட்டம் ,குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபையில் உணவு வழங்கும் இடம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.