உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அமைச்சர் மரக்கன்று நட்டு தொடக்கம் !
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆலம்பாடியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் சாமிநாதன்முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் தேதி வர உள்ளது, அதை வரவேற்கும் விதமாக ஈசா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 20242025 ஆம்ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயம் உள்ளனர். அதன் தொடக்கம் இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 3லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கேயம் சட்டமன்ற தொகுதி ஆலம்பாடியில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் முதல் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 488 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் காவிரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு நடைபெற்றுவருகிறது என தெரிவித்தனர்.
விழா முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக இரண்டாவது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று துவக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பெறுவதற்கான முயற்சி நடைபெறுவதாகவும்.2010 ஆவது ஆண்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது சென்னையிலே மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஈஷா காவிரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக துவக்கி வைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் மேலும் எப்போதுமே மரக்கன்று நடுவதிலே கலைஞர் அவர்கள் உறுதியாக இருக்க கூடியவர் தனது பிறந்தநாளைக்கு கூட பரிசுகளுடன் வரவில்லை என்றாலும் பரவாயில்லை எங்காவது ஒரு இடத்தில் மரக்கன்றுகள் நட்டாலே போதுமானது என தெரிவிப்பார்.
அதேபோல இன்றைக்கு நமது முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் பேணி காக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவர். மேலும் இது போல் அமைப்புகள் மரக்கன்றுகள் நடும் செயலில் ஈடுபடுவது எதிர்கால சந்ததிகளுக்கும் அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார். மேலும் இந்த மரம் நடும் விழா திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.