பள்ளியில் அமைச்சர் மெய்ய நாதன் ஆய்வு!
திருமயத்தை அடுத்த இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.
திருமயத்தை அடுத்த இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.15ம் தேதி தொடங்கப்படவுள்ள காலை உணவுத்திட்ட த்துக்கான ஆயத்தப்பணிகளை ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்த அவர் அங்கு நிறைய மரங்கள் வளர்க்கப்பட்டிருந்ததை பார்த்து பள்ளி நிர்வாகிகளை பாராட்டினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.
தலைமையாசிரியர் குவிண்டன், செயலாளர் சூசை அடிகள், முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா ஆகியோர் உடனிருந்தனர். நடப்பாண்டு மாவட்டத்தில் புதிதாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார். கிறிஸ்துராஜா ஆரம்பப்பள்ளி தலைமை யாசிரியை ஜேசுமேரி நன்றி கூறினார். இதேபோல் குழிபிறை வள்ளுவர் நடு நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்துக்கான ஆயத்தப்பணிகளை ஆணையர் சங்கர், ஊராட்சி தலைவர் அழகப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்.