ரூ.5 கோடி மதிப்பில் மருத்துவ பொருட்கள் வழங்கிய அமைச்சர்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண பொருட்கள், அவசர ஊர்தி உள்ளிட்டவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.;
Update: 2024-03-07 05:54 GMT
மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தொடர் முயற்சியால் (CSR) சமூக பொறுப்பு நிதி பெற்று ரூபாய் 5 கோடி மதிப்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணப் பொருட்கள் மற்றும் (RSRM) மருத்துவமனைக்கு அவசர ஊர்தி ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீமஸ் மூர்த்தி மற்றும் மருத்துவ முதல்வர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.