மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் பங்கேற்பு !
மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 05:02 GMT
அமைச்சர் பங்கேற்பு
செங்கல்பட்டு, வேதாச்சலம் நகரில் அமைந்துள்ள சின்னமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில்,சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , காஞ்சி நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உடன் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் ,நகர கழகசெயலாளர் நரேந்திரன் ,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.