தாய்ப்பாலை குடித்து ,விஷப்பாலை கக்குகிறார் அமைச்சர் ரகுபதி
தாய்ப்பாலை குடித்து ,விஷப்பாலை கக்குகிறார் அமைச்சர் ரகுபதி சட்டமன்ற என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்தார்.
தாய்ப்பாலை குடித்து ,விஷப்பாலை கக்குகிறார் அமைச்சர் ரகுபதி அதிமுகவில் எந்த இடைவெளியும் இல்லை, பிளவு இல்லை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி மதுரை எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், மேற்கு (தெற்கு) ஒன்றியக் கழகத்தின் சார்பில் குமாரத்தின் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ரதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இ மகேந்திரன், கே மாணிக்கம்,எம் பி கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், தனராஜன், வக்கீல் ராஜசேகரன் முத்து செல்வம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் லட்சுமி, சரவணபாண்டி, சிவசக்தி, பேரூர் கழகச் செயலாளர்கள் அழகுராஜா, அசோக் குமார்உட்பட பல கலந்து கொண்டனர்.
அன்னதானத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது; கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கிராமம் தோறும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் ஆட்சி மலர கூட்டு பிரார்த்தனை மேற் கொள்ளப்படுகிறது. சோழவந்தான் தொகுதியில் கோடை மழையால் 5,000 மேற்பட்ட வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே திருமங்கலம், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் வாழைமரம் சேதம் ஆகியுள்ளது இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதும் உரிய கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இன்றைக்கு இரண்டு கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அதிமுகவை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல், இதை எதிர் கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளியுடன் பேசி வருகிறார்கள். ஆதாரமில்லாமல் சிலர் பேசுவதை சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசிவருகின்றனர் அதை சில பத்திரிகைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எடப்பாடியார் யாரிடமும் பதவி கேட்கவில்லை, தொண்டர்கள் தான் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள் ,தொடர்ந்து பொதுக்குழ மூலம் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அம்மா வழியில் கழகத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் ,ஆனால் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அதிமுகவில் இருந்த பொழுது அதிமுகவின் பாலை குடித்துவிட்டு, தற்போது திமுகக்கு சென்றவுடன் அங்கு அதிமுகவிற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச் செயலாகும். அதிமுகவில் எந்த இடைவெளியும் இல்லை, பிளவு இல்லை இன்றைக்கு கட்சியை மீட்டெடுத்து ,அடித்து நொறுக்கிய தலைமை கழகத்தை மீட்டெடுத்து, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நீதிமன்றத்தின் மூலம் கழகத்தை மீட்டெடுத்து இன்றைக்கு 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளருக்கு எடப்பாடியார் கையெழுத்து இட்டுள்ளார் நிச்சயம் 40 இடங்கள் நாங்கள் வெற்றி பெறுவோம். மதுரையில் காவல்துறை அதிகாரி வீட்டிலே கைவரிசையை திருடர்கள் காட்டி உள்ளனர் ,அதனால் சாமானிய மக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது. காவல்துறையின் மீதுள்ள அச்சம் திருடர்கள், பயங்கரவாதிகள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளுக்கு பயம் விலகி விட்டது காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் எந்த குற்றங்களை நிகழாமல் தடுக்க முடியும். மன்னராட்சி ஒழித்து ஜனநாயக கட்சியை மலர செய்துள்ளோம், ஆனால் மீண்டும் சர்வாதிகாரம், அடக்கு முறையை கையாண்டு ஜனநாயகத்தை குழி தோண்ட முயற்சித்தால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் . எடப்பாடியார் கல்வியை வியாபாரமாகாமல் தடுப்பதற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார், மாணவர்கள் மதிப்பெண்ணை வைத்து தனியார் பள்ளிகள் விளம்பரம் தேடக்கூடாது, படித்து கஷ்டப்பட்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகத்தால் என எல்லோரும் ஒன்று கூடி பெறுகிற மதிப்பெண்ணை எல்லோருடைய கூட்டுப் பொறுப்பில் அந்த குழந்தை பெறுகிற மதிப்பெண்ணை தனியார் பள்ளிகள் விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதை அன்றைக்கு எடப்பாடியார் கல்வியை வியாபாரம் ஆக்குவதை கண்டித்து அதை தடை செய்தார். ஆனால் இந்த ஒரு வார காலம் பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி நாம் பார்க்கிறோம் பக்கம்,பக்கமாக விளம்பரத்திற்காக பயன்படுத்துகிற ஒரு நிலையை பார்க்கிற போது அது மீண்டும் கல்வி வியாபாரம் ஆவதை அரசு கண்டு காணாமல் இருக்கிறதா? அல்லது அரசே ஊக்கப்படுத்துகிறதா ? ஒரு மாணவர் பெறுகிற மதிப்பெண் என்பது பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தால், நண்பர்கள் என்று அனைவரின் கூட்டு பொறுப்பாக இருக்கிறபோது அதை அந்த பள்ளி மட்டுமே அந்த நிர்வாகத்தினுடைய ஒட்டுமொத்த கிரெடிட் அவர்களுக்கு எடுத்துக் கொள்வது என்பது கல்வி வியாபாரம் என்கிற அச்சம் ஏற்படுகிறது. ஆகவே இந்த அரசு மடிக்கணினி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முன்வருமா ?தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக பெண் கல்வி ஊக்குவிப்பதற்கு மீண்டும் இந்த அரசு முன்வருமா ? அதேபோல் கல்வி வியாபாரம் ஆவதை இதை தடுத்து நிறுத்துமா அல்லது அதை முறைப்படுத்த இந்த அரசு முன்வருமா? ஒரு மனிதநேயமிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கு நம்முடைய கல்வி பயன்படக்கூடிய வகையிலே நடவடிக்கை எடுத்து இந்த அரசு முன்வரவேண்டும் என கூறினார்.