17 புதிய BS-6 புறநகர் பேருந்துகளை அமைச்சர் சேலம் ராஜேந்திரன் துவக்கிவைத்தார்

Update: 2024-12-07 11:59 GMT

சேலம் 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சார்பில் 17 புதிய BS-6 புறநகர் பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கிவைத்தார் 



இதில் சேலம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களுருக்கு 13 பேருந்துகளும், சென்னைக்கு 2 பேருந்துகளும், சுற்றுலாவின் வளர்ச்சிக்காக ஏற்காட்டிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு புதிய வழித்தடத்தில் தலா ஒரு புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டது.

சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து பனமரத்துப்பட்டி வழியாக மஞ்சபாளிக்கும், சின்னதிருப்பதி பெருமாள் கோவில் வழியாக சேலம் ஜங்சனுக்கும், பூமிநாய்க்கன்பட்டி வழியாக முத்துநாய்க்கன்பட்டிக்கும், ஆத்தூரிலிருந்து களரம்பட்டி வழியாக கோபாலபுரத்திற்கும் புதிய வழித்தடங்களில் நகர பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டது.


மேலும் தாரமங்கலம் கிளையிலிருந்து வேடப்பட்டி - பெரியேரிப்பட்டிக்கும், எடப்பாடி கிளையிலிருந்து ஜலகண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், வாழப்பாடி கிளையிலிருந்து வாழப்பாடியிலிருந்து அருநூத்துமலை மற்றும் திம்மநாய்க்கன்பட்டி - வாழப்பாடிக்கும், ஆத்தூர் கிளையிலிருந்து தலைவாசலிருந்து நாவக்குறிச்சி வழியாக ஆத்தூர், ஆத்தூரிலிருந்து லத்துவாடி வழியாக கவர்பண்ணை, லத்துவாடி வழியாக நெற்குணத்திற்கும் நகர பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு செய்து பேருந்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாற்று திறனாளி தினத்தை ஒட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பரிசு பெற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கௌரவித்தனர் மேலும் 




இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப. அவர்கள், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, சேலம் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.ஆ. இராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. அருள். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் திரு. எஸ்.ஜோசப் டயஸ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 




Tags:    

Similar News