மடப்புரம் காளியம்மன் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம்
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்.;
Update: 2024-04-23 07:54 GMT
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அமைந்துள்ள தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பலரும் அமைச்சருடன் செல்பி எடுக்க கேட்ட போது, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அனைவருடனும் செல்பி எடுத்துக்கொண்டார். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அமைச்சரை சந்திக்க வந்த திமுக நிர்வாகிகள், கோயிலுக்கு அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினர். விரைவில் அறங்காவலர் குழு நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.