மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக திறப்பு விழாவில் போக்குவரத்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.
Update: 2024-03-06 08:29 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த இவ்விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், மற்றும் மோட்டார் வாகன அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் பங்கேற்றனர்.