அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
ஆரணி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
Update: 2024-03-26 05:19 GMT
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தனை ஆதரித்து தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, துறை அமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் செய்யாறு சட்டமன்றத் தொகுதி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தி.மு.க கட்சி நிர்வாகிகள், விசிக கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.