அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டார்.;
Update: 2023-12-23 07:18 GMT
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர கிச்சை பிரிவினை இன்று 23/12/23 சபாநாயகர் அப்பாவு தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மருத்துவமனை டீன் ரேவதி பாலன், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.