முப்பெறும் விழா பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்!

முப்பெறும் விழா பணிகளை ஆய்வு - விழா நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Update: 2024-06-13 07:10 GMT

முப்பெறும் விழா

கோவையில் நாளை மறுதினம் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் முப்பெரும் விழா கூட்டம் நடைபெறுகிறது.கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,நாடாளுமன்றத் தேர்தல் 40 தொகுதிகளின் வெற்றி விழா,தேர்தல் வெற்றிக்கு காரணமான முதல்வருக்கு பாராட்டு விழா ஆகிய 3 விழாகளும் சேர்த்து முப்பெரும் விழாவாக நடத்தப்படுகின்றது.

இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.இதற்கான பூமி பூஜை போடப்பட்டு மேடை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனை இன்று அமைச்சர் முத்துசாமி,ஏ.வ.வேலு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News