மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் பேச்சு !
மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 07:16 GMT
அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.புதூர், கோட்டையிருப்பு, கருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர்.பெரியகருப்பன் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மாநில அரசு கொடுக்கின்ற உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் எங்களில் சிலருக்கு வரவில்லையென கேள்வி கேட்கும் பொதுமக்கள், யாராவது 15 லட்சம் வரவில்லை என எங்களிடம் கேட்கிறார்களா?. 15 லட்சம் எவ்வளவு பெரிய தொகை, யாரும் கேட்பதில்லை காரணம் காலம் கடந்து விட்டது. ஒருத்தர் 140 கோடி மக்களை ஏமாற்றி, அதை மறக்கடிப்பு செய்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரர் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.