தேர்தல் புறக்கணிப்பதாக கூறிய மக்களிடம் அமைச்சர் பேச்சு !

ஆறுதேசம் கிராமத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய பொதுமக்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2024-04-11 09:12 GMT

அமைச்சர் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா ஆறுதேசம் கிராமத்தில் 700 - க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக பட்டவுடன் சொந்தமாக வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இந்த நிலங்களுக்கு இப்பகுதியில் உள்ள மக்கள் சுதந்திரத்திற்கு பின்பு இருந்த ஜாமின்தார்கள் குறித்த வரியையும் செலுத்தி உள்ளனர்.கடந்த 2016 -ம் ஆண்டுக்கு பிறகு வரி செலுத்த சம்பந்தப்பட்ட கிராம அலுவலகத்திற்கு வரி செலுத்த இப்பகுதி மக்கள் சென்ற போது இது மடம் வகை சொத்து என்று கூறி வரியை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேற்படி பட்டாதாரர்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு நிலவரி ரசீது வழங்கப்படாததால் அவர்களால் வங்கிக் கடன், வீட்டுக்கடன் மற்றும் அரசின் எந்த உதவிகளும் பெறமுடியாத சூழல் உள்ளது.இதனால் இப்பகுதியில் சொத்து வரி செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் அங்கு சென்று தேர்தல் முடிவடைந்த பிறகு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து அனைத்து நிலங்களுக்கும் தனிதனியாக பட்டாவும், சொத்து வரியும் செலுத்த வசதி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.
Tags:    

Similar News