திறப்பு விழாவிற்கு முன்பே காணாமல் போன பொருட்கள்; அப்செட்டான அமைச்சர்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கட்டப்பட்ட கழிப்பிடத்தில், திறப்பு விழாவிற்கு முன்பே பொருட்கள் காணாமல் போனதால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோபமடைந்தார்.

Update: 2024-06-20 05:25 GMT

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தில், திறப்பு விழாவிற்கு முன்பே பொருட்கள் காணாமல் போனதால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோபமடைந்தார். 

  உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட கழிவறைகள் பணிகள் முடிவடைந்த நிலையிலும் தேர்தல் காரணங்களால் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. கோயிலை சுற்றி வேறு கழிவறைகள் இல்லாததால் மீனாட்சி அம்மனுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 30 லட்சம் மதிப்பீட்டில் மத்திய சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து கட்டப்பட்ட கழிவறைகளை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் திறந்து வைத்தார்.

இதில் மேயர் இந்நிராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டனர். கழிவறைகளை அமைச்சர் திறந்து வைத்த பின் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் சில சேதமடைந்திருந்தன. சில இடங்களில் குழாய்கள் பொருத்தப்படாமல் இருந்தன. இதனை பார்த்த அமைச்சர் அதிகாரிகளை அழைத்து என்ன இது குழாய்களை காணவில்லை என கேட்டபோது, குழாய்களை சிலர் திருடி சென்று விட்டார்கள் என விளக்கம் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து ஆண்கள் சிறுநீர் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது சிறுநீர் பிறையில் கை கழுவும் குழாய்களை பொருத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் என்ன இது இதனை இங்கு வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்? கை கழுவும் குழாயை உடனடியாக அகற்றிவிட்டு கழிவறைகளில் பயன்படுத்தும் குழாய்களை பொறுத்த வேண்டுமென என கடிந்து கொண்டார். அமைச்சர் வந்து கழிவறையை திறந்து வைப்பதற்கு முன்பாக முறையாக, அதனை ஆய்வு கூட செய்யாத அதிகாரிகளின் அலட்சிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


Tags:    

Similar News