குடியாத்ததில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

குடியாத்தம் அருகே காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-05 08:57 GMT

ஆய்வு செய்யும் அதிகாரிகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த குமார் ( 24).இவர் கட்டிட கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை நண்பர்களுடன் வேலைக்கு சென்ற குமார் வீடு திரும்பாத நிலையில் அவரை அவரது குடும்பத்தார் தேடி வந்தனர்.

இதனிடையே தட்டப்பாறை அரசு பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறை அருகே ரத்தக்கறை பதிந்து இருப்பதாக குடியாத்தம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் அங்கு சோதனை செய்ததில் காணாமல் போன குமார் அருகில் இருந்த கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். 

 மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் மூன்று பேரைப் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும்,காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News