தரையிறங்கிய அடர் மேக மூட்டம் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் தரையிறங்கிய அடர்ந்த மேக மூட்டத்தினை கண்டு சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து உற்சாகமடைந்தனர்.

Update: 2024-06-09 08:18 GMT

அடர் மேக மூட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் பிற்பகல் வேளையில் அடர்ந்த மேக மூட்டம் ஏரி சாலை, அண்ணா சாலை, பிரையன்ட் பூங்கா, லாஸ் காட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரையிறங்கியது, இதனை தொடர்ந்து பிரையன்ட் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த ரம்யமான காட்சியை கண்டு மேக மூட்டத்தின் இடையில் பூங்கா நடைபாதைகளில் நடந்தும், பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை ரசித்தும் மலைப்பகுதிகளில் வெயில் அடர்ந்த மேக மூட்டம் என மாறி மாறி நிலவும் கால நிலையை கண்டு ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
Tags:    

Similar News