ஒகேனக்கல்லில் எம்எல்ஏ ஜி.கே மணி ஆய்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரம் ஈம சடங்கு காரியம் செய்வதற்கான கட்டிடம் கட்டும் இடங்களை பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே மணி நேரில் ஆய்வு செய்தார்.;
Update: 2024-05-07 05:55 GMT
எம்எல்ஏ ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆறு, சுற்றுலா தலமான இந்த பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் காவேரி ஆற்றின் கரையோரம் இறந்தவர்களுக்கான ஈமச்சடங்கு காரியம் செய்ய குடும்பம் குடும்பமாக வந்து செல்லும் நிலையில், ஈமச் சடங்கு செய்யவும், குளித்த பிறகு பெண்கள், ஆண்கள் தனித்தனியே உடைமாற்ற கட்டிடம் கட்டித்தர வேண்டி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்ததன் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்