ஒகேனக்கல் காவிரி ஆற்றில் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாமக கௌரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து. நேற்று காலை 200 கனஅடியாக சரிந்தது. இதனால் அகன்ற காவிரியின் இருபுறமும் வறண்டு, பாறையாக காணப்பட்டு வரும் நிலையில். குடிநீருக்கு மண் மூட்டைகள் அடுக்கி வைத்து, நீர் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று பாமக கவுரவதலைவரும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழக எல்லையில் காவிரியில் இறங்கி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர் பொன்னி நதி என்று போற்றப்பட்ட காவிரி ஆறு, பல ஆண்டுகளுக்கு பிறகு வறண்டுள்ளது. 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா பாசனத்துக்கும் உதவியாக இருக்கும் காவிரி கரையின் 2 பகுதிகளும், வறண்டுள் ளது. குடிநீருக்கும். பாசனத்திற்கும் கர்நாடகாவி டம் கையேந்தும் பரிதாப நிலை உள்ளது. வறண்ட காவிரி என்ற நிலை மாற வேண்டும் என்றார்.