கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்த எம்எல்ஏ

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட புது கிராமத்தில் நடந்த வெள்ள நிவாரண கால்நடை சுகாதார மருத்துவ முகாமை எம்.எல்.ஏ ரூபி மனோகரன் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-25 05:38 GMT

கால்நடை மருத்துவ முகாம் 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட புது கிராமத்தில் இன்று 24/12/23 வெள்ள நிவாரண கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, பாளையங்கோட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News