புதிய அங்கன்வாடி மையம் பயணியர் நிழல் கூடம் எம்எல்ஏ திறந்து வைப்பு

சங்ககிரி:புதிய அங்கன்வாடி மையம் பயணியர் நிழல் கூடம் எம்எல்ஏ திறந்து வைப்பு.

Update: 2024-03-14 11:53 GMT

அங்கன்வாடி மையம்

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம் கன்னந்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 11.76 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், தாரமங்கலம் நகராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 13.57 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் மற்றும் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பணிகனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் உள்ளிட்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம்,பயணியர் நிழல் கூட்டத்தை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சங்ககிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட பலரும் உடன்னிருந்தனர்.
Tags:    

Similar News