அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏ ஆய்வு !

நாவலூர் கிராமத்தில் சிப்காட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் வாழும் இருளர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Update: 2024-03-15 07:43 GMT

எம்எல்ஏ ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் நாவலூர் பகுதியில் சிப்காட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது..அதனால் அப்பகுதியில் இருந்து சுமார் 18-க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் லத்தூர் ஒன்றியம், பெரிய வெளிக்காடு கிராமத்தில் அவர்களுக்கு இரண்டு சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் குடிசை வீடுகள் அமைத்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில்,செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் வெளிகாடு ஏழுமலை, கோட்டாட்சியர் தியாகராஜன் ஆகியோர் நேரில் சென்று முதற்கட்டமாக அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். மேலும் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு உடனடியாக வீடுகள் கட்டித் தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News