ஆத்தூர்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து எம் எல் ஏ ஜெய்சங்கரன் தேர்தல் பரப்பரை !
ஆத்தூர் உடையார்பாளையத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 06:40 GMT
அதிமுக
சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொது மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசுக்கு தக்க பாடம்புகட்ட வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.