புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ

பரமக்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ முருகேசன் திறந்து வைத்தார்.

Update: 2024-03-14 07:47 GMT

நியாய விலை கடை திறப்பு 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 28வது வார்டு பாலன் நகரில் பகுதியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை இன்று பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் கீதா பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி நகர் மன்ற துணை தலைவர் குணசேகரன் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி ராஜு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண்.சம்பத்குமார் பரமக்குடி நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.
Tags:    

Similar News